டோராடூன்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இளைஞர் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு காட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் தனது காதலி குறித்து அவரது நண்பர்கள் இடையே பேசி கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞர் தான் காதலியுடன் உடலுறவு வைத்துகொண்டு, அதற்கு ஆதாரத்தையும் காண்பிப்பதாக சவால் விட்டுள்ளார். அதனடிப்படையிலேயே பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத்துக்கு கட்டப்பட்ட கோயில்: இது உ.பி. சம்பவம்