பெலகாவி: கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்திலுள்ள கோகாக் நீர் வீழ்ச்சிக்கு விடுமுறை நாளான நேற்று (அக்.2) பிரதீப் சாகர் என்ற இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் நீர்வீழ்ச்சி அருகே பாறையில் நின்று கொண்டு தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக கோகாக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
![நீர்வீழ்ச்சியிலிருந்து 140 அடி பள்ளத்தில் விழுந்தவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-bgm-01-3-gokak-flase-jaribidda-yuvaka-bachav-7201786_03102021095326_0310f_1633235006_789_0310newsroom_1633245806_422.jpg)
தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரதீப்பைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் பிரதீப் இறந்திருக்கலாம் எனக் கருதி தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
![தேடும் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-bgm-01-3-gokak-flase-jaribidda-yuvaka-bachav-7201786_03102021095326_0310f_1633235006_53_0310newsroom_1633245806_839.jpg)
யாரும் எதிர்பாராத விதமாக பிரதீப் இன்று (அக்.3) அதிகாலை 4 மணியளவில் அவரது நண்பர்களைத்தொடர்பு கொண்டு, தான் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்து, தனது இருப்பிடத்தைத் தெரிவித்தார். உடனடியாக அவரது நண்பர்கள் சமூக ஆர்வலர் அயூப்கானிடம் தெரிவித்தனர்.
![தேடும் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-bgm-01-3-gokak-flase-jaribidda-yuvaka-bachav-7201786_03102021095326_0310f_1633235006_41_0310newsroom_1633245806_49.jpg)
இதையடுத்து நீர்வீழ்ச்சிக்கு அருகில் 140 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த பிரதீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை