ETV Bharat / bharat

ஒயினுக்காக செல்போன் டவர் ஏறிய இளைஞர்! - man climbs cellphone tower

ஏகடாலியில் ஒயின் வாங்க காசு கேட்டு இளைஞர் ஒருவர், செல்போன் டவரில் ஏறி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

telephone tower
ஏகடாலி
author img

By

Published : Jun 17, 2021, 9:16 AM IST

Updated : Jun 17, 2021, 10:55 AM IST

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் ஏகடாலியைச் சேர்ந்தவர் சந்தோஷ் படேல். இவர் குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

நாள்தோறும் மதுபோதையில் அப்பகுதி மக்களிடம் ரகளையில் ஈடுபடுவது, குடிக்க காசு கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 16), ஒயின் வாங்குவதற்குப் பணம் கேட்டு அலைந்துள்ளார். ஒருகட்டத்தில், பணம் வேண்டுமென செல்போன் டவர் மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், அந்த இளைஞரிடம் கீழே இறங்குமாறு சமாதான பேச்சு நடத்தியுள்ளனர்.

ஒயினுக்காக செல்போன் டவர் ஏறிய இளைஞர்

இறுதியாக, ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே கீழே வருவேன் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, உறவினர்கள் அவரது கணக்கிற்குப் பணம் அனுப்பிய பிறகே கீழே வந்துள்ளார். சுமார் 3 மணி நேரம் அவருடன் காவல் துறையினர் போராடியுள்ளனர்.

இதையும் படிங்க: 'என்னது பிரியாணி பிடிக்கலையா...' வாடிக்கையாளர்களுக்கு அடி உதை

Last Updated : Jun 17, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.