ETV Bharat / bharat

9 வயது சிறுமியின் கிதாபி மஸ்தி நூலகம்... வருங்காலத்தின் அறிவுக் கண்ணை திறக்கும் நிகழ்கால மழலை! - கட்டிடக்கலை மாணவர்களின் தேசிய சங்கம்

Kitabi Masti library: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளுக்கு ஒளியாக இருந்து வருகிறது 9 வயது சிறுமியின் கனவான கிதாபி மஸ்தி நூலகம். தற்போது மாநிலத்தின் தனிச்சிறப்பாக உருப்பெற்று உள்ளது இந்த நூலகம்.

கிதாபி மஸ்தி நூலகம்
கிதாபி மஸ்தி நூலகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 7:23 PM IST

Updated : Oct 30, 2023, 11:38 AM IST

Kitabi Masti Library

போபால் (மத்திய பிரதேசம்): "ஒரு நூல் நிலையம் திறக்கும்போது, இரு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன" என்ற விவேகானந்தரின் கூற்றின் படி கல்வி என்பது ஒருவர் வாழ்வில் ஆகச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் நமக்கு எதை விட்டுச் சென்றார்களோ இல்லையோ கல்வியையும் அதை கற்கும் முறையையும் தெளிவுபடுத்திச் சென்றுள்ளனர்.

திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் என ஆரம்பித்து காமராஜர், அண்ணா, பெரியார் என பெருந்தலைவர்கள் வரை அனைவரும், கல்வியின் ஆழத்தை விளக்கிச் சென்றுள்ளனர். ஒருவரின் வாழ்க்கை கற்றலில் ஆரம்பித்து, கற்றலிலே நிறைவு பெறுகிறது. இதுவே மனித வாழ்வில் நடைபெறும் இயல்பு.

இந்த இயல்பு காலப்போக்கில் பலருக்கு மறுக்கப்படும் சூழலாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கற்றலை மறந்து பணத்தை தேடியதன் விளைவே இன்று கல்வி மறுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி, கற்றல் போன்ற வார்த்தைகளின் ஆழம் அறிந்து உருவானதே 'கிதாபி மஸ்தி'.

இந்த நூலகத்தின் ஒவ்வொரு செங்களிலும், நிறைந்திருக்கும் புத்தகங்களும் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளின் கதைகளை அடுக்குகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் துர்கா நகர் பஸ்தி என்ற பகுதியில் குடிசையில் தொடக்கம் கண்டு, தற்போது கட்டிடக்கலை மாணவர்களின் தேசிய சங்கத்தின் முயற்சியால் கிதாபி மஸ்தி புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இன்று பல லட்ச மாணவர்களின் கல்விக்கு ஒளியாக இருக்கக்கூடிய கிதாபி மஸ்தி 9 வயது சிறுமியால் துவக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகது. முஸ்கன் அஹிவார் என்ற சிறுமியின் கனவு பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையாக மாற்றம் கண்டுள்ளது. முஸ்கனின் கனவில் தொடங்கி இன்று அதில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு மக்களின் ஒன்றிணைந்த கனவுகளாக பயணம் செய்து வருகின்றது கிதாபி மஸ்தி நூலகம். குறிப்பாக நூலகம் என்பதைக் கடந்து இன்று பல குழந்தைகளின் நம்பிக்கையாக இயங்கி வருகிறது.

இது குறித்து முஸ்கன் கூறுகையில், "என்னுடைய ஒன்பது வயதில் எனக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் வந்தது. பின்னர் அது நூலகம் என்ற கனவுக்கு வழிவகுத்தது. எங்கள் ஊரில் என் போன்ற குழந்தைகள் பலரும் கல்வி கற்கும் திறன் இருந்தும் அதற்கான வழிகள் இல்லாமல் இருந்தனர். இந்த நிலைக்கு மாற்றம் கொண்ட வர எண்ணினேன்.

அதன்படி 2016 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி சின்ன குடிசை டென்ட்டில் கயிறு கட்டி அதில் கதை சொல்லும் வண்ண காட்சிகள் நிறைந்த படங்களை வைத்தேன். முதலில் குறைந்த அளவிலான குழந்தைகளே அதனை வாசிக்க முன்வந்தனர். பின்னர் தினமும் குழந்தைகளின் வருகை அதிகரித்தது. குழந்தைகள் கடந்து பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் என் கனவிற்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் அடியெடுத்து வைத்தனர்.

மூவாயிரம் புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நூலகம் விரிவடையும் போது, என் வீட்டில் நூலகத்தை தொடர்வதற்கு சிக்கல் ஏற்பட்டது. பெரிய எண்ணங்களுடன் இருந்த எங்களின் கனவிற்கு எங்களின் சின்ன வீடு ஒத்துழைக்க மறுத்தது. பின்னர் நூலகத்தை மாற்றி அமைக்க துர்கா பூஜையின் போது காட்சிப்படுத்தப்படும் இடத்தை தேர்வு செய்து அங்கு தொடர்ந்தோம்.

இந்த கனவு நினைவு பெற்றதற்கு உழைப்புகளை கடந்து பலரின் கல்வி கனவே காரணமாய் இருக்கிறது. தற்போது இங்கு குறைந்தது ஒரு நாளுக்கு 25ல் இருந்து 30 மாணவர்கள் வருகை தருகின்றனர்" என்றார்.

தொடர்ந்து நூலகத்தின் தன்னார்வலரான பங்கஜ் தாக்கூர் கூறுகையில், "பல்வேறு சூழ்நிலைகள், கடந்து வளர்ச்சிக் கண்டது கிதாபி மஸ்தி. ஆனால் அதனை புனரமைக்கப்பட வேண்டும் என்று நினைத்த போது மலையாய் மறைத்தது பொருளாதாரம். பின்னர் நூலகத்தின் அருமை அறிந்து கட்டிடக்கலை மாணவர்களின் தேசிய சங்கம் இதனை புனரமைக்க முன்வந்தது.

இதனை 'கபாத் சே ஜுகாத்' என்ற செயல் திட்டத்தின் கீழ் பழைய டின் கேன், டெரக்கோட்டா டைல்ஸ், மரப்பெட்டி போன்ற பல்வேறு தேவையற்ற பொருட்களை கொண்டு புனரமைத்தனர். இதனால் குழந்தைகள் வருகைக்கு கூடுதல் வழிவகுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல்!

Last Updated : Oct 30, 2023, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.