ஹைதராபாத்:தெலங்கானா டிஆர்எஸ் கட்சியின் சார்பாக நாளை(ஜூலை2) ஹைதராபாத் வரவிருக்கும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்ஹா நாளை ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்திற்கு வருவார் எனவும், இதனைத் தொடர்ந்து 10,000 பைக்குகளுடன் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு கூட்டம் நடைபெறும் இடமான ஜல் விஹார் வரை பேரணி நடத்தப்படும் தெலங்கானா டி.ஆர்.எஸ்(தெலங்கானா ராஷ்டீரிய சமிதி) கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவ், சின்ஹா வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மோடி ஆட்சியில் தாக்குதலுக்கு உள்ளான அரசியல் சாசன நிலைப்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்த சின்ஹாவை டிஆர்எஸ் கட்சி ஆதரிக்கிறது என்று ராமராவ் சமீபத்தில் கூறியிருந்தார். பாஜக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘கடந்த கால குடியரசுத் தலைவர்கள் போல் நான் இருக்க மாட்டேன்’ - யஸ்வந்த் சின்ஹா