இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் பிஏ1 (BA.1) மற்றும் பிஏ2 (BA.2) ஆகிய இரண்டு வைரஸ் கலப்பான 'எக்ஸ்இ' தொற்று அதிவேகமாக பரவிவருகிறது. அந்த நாட்டில் 600-க்கும் மேற்பட்டோருக்கு இந்த புதிய வகை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 6ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஏப். 9) குஜராத் மாநிலத்தில் 67 வயது முதியவருக்கு எக்ஸஇ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை, மும்பையை சேர்ந்த 67 வயது முதியவர் மார்ச் 12ஆம் தேதி குஜராத்தின் வதோதராவுக்கு வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு எக்ஸஇ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த எக்ஸ்இ தொற்றால் பாதிக்கப்பட்டால் பொதுவாக சளி, தும்மல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும், வீரியம் குறித்து இன்னும் ஆராயப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: புதிய வகை கரோனா 'எக்ஸ்இ' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை