ETV Bharat / bharat

களத்தில் மல்யுத்த வீரர் உயிரிழப்பு.. கொலையா..? - மல்யுத்த வீரர் பலி

பீகாரில் மல்யுத்த போட்டியில் எதிரணி வீரர் அழுத்தி தாக்கியதில், மற்றொரு மல்யுத்த வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மல்யுத்த வீரர்
மல்யுத்த வீரர்
author img

By

Published : Jan 27, 2023, 8:28 PM IST

பாட்னா: பீகாரில் மல்யுத்தபோட்டியின்போது வீரர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லக்கிஷராய் நகரில் பசந்த் பஞ்சமியை முன்னிட்டு, மல்யுத்தபோட்டி நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் மல்யுத்த வீரர் தாக்கியதில் எதிரணி வீரர் களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த வீரர் பாட்னாவை சேர்ந்த சிவம் குமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவம் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஹுசைனா மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனு யாதவ், மற்றும் பாட்னாவை சேர்ந்த மொகமா களத்தில் விளையாட இருந்ததாகவும், இதில் மொகமாவுக்கு பதிலாக சிவம் குமார் கட்டாயத்தின் பேரில் களமிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பகை காரணமாக தொடை மற்றும் கழுத்து பகுதியில் அழுத்தி தாக்கியதால் சிவம் குமார், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தலைமறைவான போட்டியின் நடுவர் மற்றும் போட்டி அமைப்பாளர்களை தேடி வருவதாக போலீசார் கூறினர். முன்பகை காரணமாக மல்யுத்த வீரர் தாக்கப்பட்டு களத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2023 மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு என்ன இருக்கிறது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.