ETV Bharat / bharat

உலகிலேயே மிக உயரமான சாலை லடாக்கில் திறந்து வைப்பு

லடாக்கின் லே பகுதிக்கும் பாங்காங் ஏரிக்கும் இடையே 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகத்திலேயே உயரமான சாலையை நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் நேற்று (ஆக.31) திறந்து வைத்தார்.

worlds-highest-road
worlds-highest-road
author img

By

Published : Sep 1, 2021, 5:16 PM IST

இந்திய ராணுவத்தின் 58 பொறியாளர் படைப்பிரிவால் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்யாங் செரிங் நம்கியால் கூறுகையில், "இது பொதுமக்கள் பயணிக்கக்கூடிய உலகிலேயே உயரமான சாலையாகும். இதன் உயரம் 18 ஆயிரத்து 600 அடி. இதற்கு முன்னதாக, 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலைதான் உலகிலேயே உயரமான சாலையாக இருந்தது.

இந்த சாலை உள்ளூர்வாசிகளின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். குறிப்பாக சாகசப் பயணங்களுக்காக லடாக் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்தச் சாலை மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.

இந்த 18,600 அடி உயர சாலையை அமைத்ததற்காக 58 பொறியாளர் படைப்பிரிவிற்கு நன்றி" எனத் தெரிவித்தார்.

சுற்றுலா மூலம் லடாக்கிற்கு கூடுதல் வருமானம் வரவாய்ப்பு

லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகும். லடாக்கின் கிழக்கில் திபெத், தெற்கே இமாச்சலப் பிரதேசம், மேற்கில் பாகிஸ்தான், வடக்கே சின்ஜியாங் ஆகியவை உள்ளன.

அழகிய மலைத்தொடர்களையும், சாலைகளையும் கொண்ட லடாக் இமயமலை வரை நீண்டுள்ளது. லடாக்கில் ஒரு முக்கியமான அங்கம் சுற்றுலா. இதனால் அங்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இருசக்கர வாகனத்தில் சாகசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் எந்த ஒரு இந்திய இளைஞரும் லடாக் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

இதையும் படிங்க: லடாக்கில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்- ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.