ETV Bharat / bharat

110 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் சாலை; அமராவதி-அகோலா நெடுஞ்சாலையில் அமைக்கும் பணிகள் தீவிரம்! - மகாராஷ்டிரா

110 மணிநேரத்தில் 75 கிலோமீட்டர் சாலையை அமைத்து கின்னஸ் உலக சாதனையை படைக்கும் நோக்கில் சாலை அமைப்பு பணிகள் தொடங்கி விரைவாக நடந்துவருகின்றன.

அமராவதி-அகோலா நெடுஞ்சாலையில் தொடங்கியது ஒரே முறையில்  75 கிலோமீட்டர் சாலை அமைத்து உலக சாதனை படைக்கும் முயற்சி!

author img

By

Published : Jun 5, 2022, 6:34 AM IST

மும்பை: நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தொடர்ந்து 110 மணிநேரத்தில் 75 கிலோமீட்டர் சாலையை அமைத்து கின்னஸ் உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி சாதனை படைக்கும் நோக்கில் சாலை அமைப்பு பணிகள் நேற்று (ஜூன்4) காலை 7 மணிக்கு தொடங்கியன.

இந்த 75 கிலோ மீட்டர் சாலையானது உத்தரப் பிரதேசத்தின் லோனியில் தொடங்கி உத்தரகண்ட்டின் மனாவில் முடிகிறது. இப்பணியில் பொறியாளர்கள் உள்பட 800 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து ராஜ்பாத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கடம் கூறுகையில், “அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலை அமைப்பதில் சாதனை படைக்கப்போகிறோம். இதற்கு முன்னர் கத்தாரில் 22 கி.மீ சாலையை தொடர்ந்து அமைத்து சாதனை படைத்துள்ளனர். தற்போது அமராவதி-அகோலா வழித்தடத்தின் பணிகள் மூலம் கத்தாரில் ஏற்படுத்திய கின்னஸ் உலக சாதனையை முறியடிக்க உள்ளோம் என்றார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் மிகப்பெரிய மலை சரிவு... வைரல் வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.