ஐதராபாத் : உலக பூச்சி தினம் இன்று (ஜூன். 6) கடைபிடிக்கப்படுகிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பூச்சிகளால் ஊறுவிளைவிக்கும் ஆபத்துக்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசங்களில் பூச்சிகளின் இடர்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் சுகாதார நிலைமைகள் மோசமாக பாதிக்கிறது. பல வகையான பூச்சிகள் பயிர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. சில பூச்சிகள் விலங்குகள், உடைகள் மற்றும் கட்டிடங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தான வகையில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
பூச்சி மேலாண்மை மற்றும் தாவரம், மரங்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க பூச்சிகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 6ஆம் தேதி உலக பூச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பூச்சிகளால் ஏற்படும் சாதக மற்று பாதக நிகழ்வுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலக பூச்சி தினம் முதன் முதலாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கடைபிடிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் சீன பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கம் (CPCA) உலக பூச்சி தினம் குறித்து அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து தேசிய பூச்சி மேலாண்மை சங்கம், ஆசிய மற்றும் ஓசியானியா பூச்சி மேலாளர்கள் சங்கம் மற்றும் ஐரோப்பிய பூச்சி மேலாண்மை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஜூன் 6ஆம் தேதி உலக பூச்சி தினத்தை கடைபிடித்து வருகின்றன.
டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் மிக வேகமாகப் பரவி வரும் இந்தியா போன்ற நாடுகளில் உலக பூச்சி தினம் என்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பூச்சிகளால் ஏற்படும் நோய்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு இந்நாள் இன்றியமையாத நாளாக காணப்படுகிறது.
பூச்சிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் அல்லது உடல்நலக் கோளாறுகளை காணலாம் :
கொசுக்களால் பரவும் நோய்களின் அபாயங்கள்: பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அவசியம். கொசுக்கள் பல வழிகளில் நோய்களை பரப்புகின்றன.
கரப்பான் பூச்சிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்: கரப்பான் பூச்சிகள் வீட்டின் சுகாதாரத்தை கேள்விக் குறியாக்குகின்றன, மேலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
கரையான்களால் ஏற்படும் ஆபத்து: பொதுவாக மண் புற்றில் வாழும் கரையான்கள், மரப் பொருட்கள் மற்றும் சமான்களை சேதப்படுத்துகின்றன. கரையான்கள் மூலம் உடல் உபாதைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் மனிதர்களுக்கு உருவாகின்றன.
கொறி விலங்குகளால் பரவும் நோய் அபாயங்கள்: எலிகள் மோசமான கொறித்துண்ணியாக காணப்படுகிறது. எலிகள் நோயைப் பரப்புவது மற்றும் உணவை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், அவை வீட்டு உள்ளிட்ட இடத்தையும் சேதப்படுத்துகின்றன.
இதையும் படிங்க : Karnataka Accident : ஆன்மீக சுற்றுலா சென்ற போது சோகம்.. கார் விபத்தில் 5 பேர் பலி!