இன்று (ஆகஸ்ட் 10) உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகக் கூறினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உலக சிங்கங்கள் தினத்தன்று அவற்றைப் பாதுகாப்பதில் ஆர்வம்காட்டும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்" எனக் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டில் மட்டும் கிர் காடுகளில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 674ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 29 விழுக்காடு வளர்ச்சியாகும்.
தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கிர் சிங்கங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை அமைத்துத் தரும் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக மோடி தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "உள்ளூர் மக்கள், உலகளாவிய நடைமுறைகளைக் கொண்ட பல முயற்சிகள் விலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க உதவியது. இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உதவும்" என்றார்.
இதையும் படிங்க: உலக சிங்கங்கள் தினம் - வனவேந்தனை காப்பது நமது கடமை