ETV Bharat / bharat

சர்வதேச மனித உரிமைகள் தினம்: சமத்துவ உலகை கட்டியெழுப்புவோம்! - December 10, 1948

நாம் விரும்பும் உலகை மீண்டும் கட்டியெழுப்புவதில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தையும், மனிதநேயத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்த மனித உரிமைகள் தினம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

human rights day
மனித உரிமைகள் தினம்
author img

By

Published : Dec 10, 2020, 6:45 PM IST

மனித உரிமைகள் தினம், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப்படுத்தியது. அதனைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் நாள் உலக நாடுகள் முடுவதும் “மனித உரிமைகள் தினம்” கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் மற்றொரு சாதனையாகும்.

ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பிரகடனம் உலகிலுள்ள அனைவருக்குமான சம உரிமைகளை உறுதிபடுத்தியுள்ளது. இந்த பிரகடனம் ஒருங்கிணைக்கப்பட்ட ஆவணமாக இல்லையென்றாலும், இது 60க்கும் மேற்பட்ட மனித உரிமைகளை உள்ளடக்கி ஊக்கப்படுத்துகிறது. இது 500க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஆவணமாக கிடைக்கிறது.

2020 நோக்கம்: சிறப்பாக மீண்டெழுவோம் - மனித உரிமைகளுக்காக எழுவோம்;

இந்த ஆண்டு மனித உரிமைகள் தினமானது கரோனா தொற்றோடு இணைந்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மனித உரிமைகளை சிறப்பான முறையில் திரும்ப மீட்டெடுக்கவேண்டிய நிலை உள்ளது.

கரோனா தொற்றால் ஏற்பட்ட தோல்விகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், இதனால் ஏற்பட்ட பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகளை மனித உரிமைகளை நிலைநிறுத்தி தகர்க்க வேண்டும்.

நாம் விரும்பும் உலகை மீண்டும் கட்டியெழுப்புவதில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தையும், மனிதநேயத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்த டிசம்பர் 10 ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கரோனாவிற்கு பிறகும் உலகத்தில் மனித உரிமைகள் நிலைத்திருக்க வேண்டும்; இந்த கரோனா தொற்று, வறுமையை அதிகப்படுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி மனித உரிமைகளை சீர்குலைந்துள்ளது. இந்த இடைவெளிகளை தடுப்பதற்கும், மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும் நமது சமத்துவ செயல்பாடுகள் என்பது மிகவும் முக்கியமாகும்.

அனைத்து பாகுபாட்டையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: பாகுபாடு, ஏற்றத் தாழ்வுகளை இந்த கரோனா தொற்று முற்றிலுமாக அழித்துள்ளது. இதனால ஏற்பட்ட சமத்துவமும், பாகுபாடற்ற தன்மையும் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட பிறகும் பின்பற்றப்பட வேண்டும்.

ஏற்றத்தாழ்வுகள்: கரோனா தொற்றோடு, சமத்துவமின்மை என்ற தொற்றிலிருந்தும் நாம் மீண்டு வரவேண்டியுள்ளது. அதற்காக பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் வேண்டியுள்ளது.

ஒற்றுமை செயல்பாடு: நாம் அனைவரும் தற்போது ஒன்றாக இருக்கிறோம். இந்த நிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனாவிற்கு பிறகு வரும் வருங்கால தலைமுறைக்கு ஒரு சிறப்பான உலகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு இருக்கிறது.

இந்தியாவின் 2019ஆம் ஆண்டு மனித உரிமை அறிக்கை;

இந்தியா பல சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகும். 2017ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமரானார். 60 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நாடாளுமன்றத் தேர்தல் நியாயமானவை என்று பார்வையாளர்கள் கருதினர். இருப்பினும் வன்முறை நிகழ்வுகளும் ஒருபுறம் நிகழ்ந்த வண்ணம் இருந்தது.

குறிப்பிடத்தக்க மனித உரிமை பிரச்னைகள்: சட்டவிரோத, தன்னிச்சையான கொலைகள், காவல்துறையினரால் செய்யப்பட்ட சட்டவிரோத கொலைகள், சிறை அலுவலர்களால் சித்திரவதை, அரசு அலுவலர்களால் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல், கடுமையான, உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள், கருத்து சுதந்திரம், பத்திரிகை மீதான கட்டுப்பாடுகள், வன்முறை அச்சுறுத்தல்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான நியாயமற்ற கைதுகள், வழக்குகள், சமூக ஊடக பேச்சு, அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மீது அதிகப்படியான கட்டுப்பாட்டு விதிகள், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலான ஊழல் பற்றிய அறிக்கைகள், மத இணைப்பு, சமூக அந்தஸ்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை மற்றும் பாகுபாடு, கட்டாய குழந்தைத் தொழிலாளர்கள் உள்பட இதுபோன்ற துஷ்பிரயோகங்களை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்க முயற்சிகள் இருந்தபோதிலும், இதனை கண்டுகொள்ளாத அலுவலர்களின் செயல்பாடுகள் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நீடித்து வருகிறது.

தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவிடும் நெறிமுறைகளை உணர்த்துவதே இந்த மனித உரிமைகள் தினம். அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மனித இனத்திற்குள் சிறு பிளவுகள் கூட ஏற்படாதவாறு சமத்துவதோடு வாழ்வதற்காகவே இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.