ETV Bharat / bharat

World Heart Day 2023: உலக இதய தினமான இன்று இதயத்தின் முக்கியத்துவம், மாரடைப்பு பிரச்சனைக்கான காரணங்களை அறிவோம்! - World Heart Day 2023 theme

World Heart Day 2023: செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமையான இன்று உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் இதய பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..

உலக இதய தினம்" ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக இதய தினம் 2023
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 10:12 AM IST

சென்னை: உலகம் முழுவதும் பரவலான மக்களுக்கு இதய பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமானது. இதனை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்.29 ஆம் தேதி 'உலக இதய தினம்' அனுசரிக்கப்படுகிறது.

உலக இதய தினத்தின் முக்கியத்துவம் என்ன?

இந்த நாளில் இதய நோய் (CVDs), இதய நோய் தடுப்பு நடவடிக்கைகள், இதய நோயின் அறிகுறிகள், இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதயத்தை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு நாடுகளில் இதய நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

உலக இதய தினம் 2023 கருப்பொருள் என்ன?

இந்த ஆண்டிற்கான உலக இதய தினத்தின் கருப்பொருள் 'இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி' என்பதாகும். இதய நோய்கள் (CVDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மற்றும் இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும்.

இதய நோய்க்கு முக்கிய காரணம் என்ன?

மன அழுத்தம், தவறான உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய காரணம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோய்களால் இறக்கின்றனர்.

இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன?

மார்பு வலி, கை, கால்களில் வலி மற்றும் வீக்கம், மூச்சு திணறல், மிக வேகமாக அல்லது மெதுவான இதயத் துடிப்பு, படபடப்பு, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஆகியவை இதய நோய்க்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளாகும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நடவடிக்கை என்ன?

நம் உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முறையான உடற்பயிற்சி, யோகா, தியானம், தரமான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான ஊட்டச்சத்து, புகை பிடிப்பதை தவிர்த்தல், மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல், மது அருந்துவதை தவிர்த்தல், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், ஆரோக்கியமான உடல் எடையை கொண்டிருத்தல் வேண்டும்.

உலக இதய தினத்தின் வரலாறு:

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவரான அந்தோனி பேட் டி லூனா (Antoni Baie de Luna), உலக இதய கூட்டமைப்புடன் (WHF) இணைந்து, உலக இதய தினம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் உலக இதய தினம் செப்டம்பர் 24, 2000 அன்று நடந்தது. அதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், இருதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து மற்றும் இந்த நிலைமைகளை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தெரிவிப்பதே, உலக இதய தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

உலக இதய தினத்தின் நடவடிக்கைகள் என்ன?

இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம், பிரச்சாரங்கள், உடற்பயிற்சி போட்டிகள், இதயம் பாதுகாப்பு குறித்த ஆரோக்கியமான சமையல் வகுப்புகள், சமூக ஊடக பிரச்சாரங்கள், இதய விழிப்புணர்வு குறித்த ஓட்டங்கள், நடைப்பயிற்சிகள், கச்சேரிகள், நிதி திரட்டுதல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், இலவச சுகாதார சோதனைகள் ஆகியவற்றை நடத்தி மக்களிடையே இதய நோய் குறித்து விழிபுணர்வை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க: Turmeric Health Benefits in tamil:அஜீரண பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இனி வீட்டிலிருந்தே சரி செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.