ETV Bharat / bharat

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்த இடம் இதுதானா? - மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலைத் தயாரிக்க 149 நாடுகளில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில், 139ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

World Happiness Report 2021
World Happiness Report 2021
author img

By

Published : Mar 20, 2021, 1:03 PM IST

Updated : Mar 20, 2021, 1:35 PM IST

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க், உலகில் எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கணக்கிட ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதற்காக 149 நாடுகளை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்து, இரு காரணிகளை முதன்மையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்தது.

இரு காரணிகள்

  • கரோனா நெருக்கடி மக்களின் வாழ்க்கையின் கட்டமைப்பு மற்றும் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்
  • நாட்டின் அரசாங்கம் கரோனா நெருக்கடியை கையாண்ட விதம். இந்த இருகாரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

149 நாடுகளில் இந்தியா 139ஆவது இடத்தையும், அண்டை நாடுகளான பாகிஸ்தான் 105ஆவது இடத்தையும், சீனா 84ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

இதையும் படிங்க:இன்று அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!

Last Updated : Mar 20, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.