ETV Bharat / bharat

நடிகை ஆலியா பட் ஹாலிவுட்டில் நடிப்பதை விளம்பரப்படுத்தி கொண்டாடிய அமுல் நிறுவனம்!! - alia bhatt

நடிகை ஆலியா பட் பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கடோடுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து அமுல் நிறுவனம் விளம்பரப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 14, 2023, 7:36 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் நடிகை ஆலியா பட் ஹாலிவுட் திரையுலகில் அடி எடுத்து வைத்து உள்ள நிலையில், முதல் படைப்பான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ வெப் சீரியஸில் நடிப்பதை முன்னிட்டு அதனை வரவேற்கும் விதத்தில், பிரபல பால் நிறுவனம் அமுல், வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ வெப் சீரிஸில் ஆலியா பட், பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கடோட்டுடன் இணைந்து நடிக்கிறார். ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ வெப் சீரிஸில் பாலைவனத்தை பின்புலமாக கொண்டு வெளியாகியுள்ள காட்சியை பயன்படுத்தி அமுல் நிறுவனம் ஒரு வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. ஆலியா பட், கேல் கடோட்டுடன் இருக்கும் புகைப்படத்தில் கேல் கடோட் தனது கையில் உள்ள செல்ஃபி ஸ்டிக் மூலம் செல்ஃபி எடுக்கிறார்.

அதே நேரத்தில் ஆலியா மற்றும் கேல் கடோட் ஆகிய இருவரும் கையில் பிரட்டுடன் அமுல் நிறுவனத்திற்காக போஸ் கொடுக்கும் வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது. இந்த விளம்பரத்தில் கேல் கடோட்டும் அலியா பட்டும் ‘wonder women’ கேரக்டரில் தோன்றுகின்றனர். இந்த விளம்பரத்திற்கு ‘heart of taste’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அமுல் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது.

“Amul Topical: alia bhatt makes her hollywood debut in action thriller, heart of stone!”என்ற தலைப்புடன் அமுல் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் இந்தியா இதனை பாராட்டியுள்ளது. "heart of stone" படப்பிடிப்பின் போது கேல் கடோட் மற்றும் ஆலியா பட் இருவரும் நண்பர்களாகி உள்ளனர். மேலும் கேல் கடோட், ஆலியா பட் நடிப்பு திறனை பாராட்டியுள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த வெப் சீரிஸான “heart of stone” இல் ஜேமி டார்னட்டுடன் ஆலியா பட், தனது முதல் ஹாலிவுட் படைப்பில் நடிக்கிறார். சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் ரன்வீர் சிங்குடன் ஆலியா பட் நடித்து வெளியான “rocky aur rani kii prem kahani" திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: Hawaii fire accident: ஹவாய் காட்டுத் தீ - பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.