சுல்தான்பூர் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னோவில் புறவாஞ்சல் விரைவுச்சாலையை (Purvanchal Expressway) பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 16ஆம் தேதி திறந்துவைத்தார்.
அப்போது, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண் ஒருவர் கறுப்புக்கொடி காட்டினார். இந்நிலையில், லக்னோ - வாரணாசி சாலையில் அந்த பெண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஜன.3) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அவர் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை வழிமறித்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பெண் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நரேந்திர மோடி திமிர் பிடித்தவர்- ஆளுநர் சத்ய பால் மாலிக்