டெல்லி : சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட இருவர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு டெல்லியில் சாகேத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. வழக்கறிஞர்கள், பொது மக்கள் என கூட்டம் நிரம்பி வழிந்த நீதிமன்ற வளாகத்தில் தீடீரென துப்பாக்கிச் சூடு நடத்தும் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நீதிமன்ற வளாகமே களேபரம் போல் காட்சி அளித்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். வழக்கறிஞருடன் நின்று கொண்டு இருந்த பெண் மீது மரம் நபர் நான்கு ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் வழக்கறிஞர் உடையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பெண்ணின் வயிற்று பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காயத்திற்கு பெண் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிக ரத்தம் வெளியேறினாலும், நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர்கள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தலைமறைவான மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணுடன் இருந்த வழக்கறிஞருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த பிபரவரி மாதம் பஞ்சாப் லூதியான நீதிமன்றத்திலும் இதே போன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் கோச்சர் மார்க்கெட் பகுதியில் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல் - 5 வீரர்கள் பலி!