பெங்களூரு: பெங்களூரு ஒயிட் பீல்டு கடுகோடி பகுதியின் நடைபாதையில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் சௌந்தர்யா அவரது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாகக் கம்பியில் மதித்ததில் தாய் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை நடந்து சென்றதால் அறுந்து விழுந்த மின் கம்பியை மதித்து இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து கடுகோடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.
பெங்களூரு ஏ.கே.கோபாலன் காலணியில் வசிக்கும் சௌந்தர்யா அவரது பெண் குழந்தை மற்றும் சந்தோஷ் ஆகியோர் தீபாவளிக்குச் சென்னை சென்று விட்டு இன்று அதிகாலை (நவ.19) மீண்டும் பெங்களூரு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டிற்குச் சென்று கொண்டு இருக்கும் போது ஒயிட் பீல்டு கடுகோடி பகுதியின் நடைபாதையில் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்ததில் சௌந்தர்யா மற்றும் அவரது பெண் குழந்தை இருவரும் உயிரிழந்தனர். மேலும் தனது மனைவி மற்றும் குழந்தை மின்சாரம் தாக்கும் போது அவர்களைக் காப்பாற்ற சந்தோஷ் முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பி அறுந்து மின்சாரம் தாக்கி தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி உதவிப் பொறியாளர் சேத்தன், இளநிலை பொறியாளர் ராஜண்ணா மற்றும் சம்மந்தப்பட்ட மின்சார அலுவலக ஊழியர் ஆகிறார்களிடம் கடுகோடி காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருவதாகவும், மேலும் இச்சம்பவம் குறித்து ஐபிசி பிரிவு 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஒயிட் பீல்ட் பிரிவு (DCP) துணை காவல் ஆணையர் சிவகுமார் குணாரே தெரிவிக்கும் போது, "தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு வந்த சௌந்தர்யா, சந்தோஷ் மற்றும் 9 மாத பெண் குழந்தையுடன் வீட்டிற்கு அதிகாலை 6 மணியளவில் சென்ற போது இருட்டில் நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட் (BESCOM) அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் தங்கையை காதலித்த இளைஞர் கொலை; இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு நபர் கைது..விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!