ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும். மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக அம்மாநில காவல்துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மல்கன்கிரி மாவட்டத்தில் வசிக்கும் 23 வயது பெண் மாவோயிஸ்ட் ஒருவர் கோரட்புத் மாவட்டத்தில் காவல்துறையினர் முன் சரணடைந்துள்ளார். இதுகுறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குகேஷ் குமார் கூறுகையில், சரணடைந்த பெண்ணின் பெயர் ராமே மட்காமி. அவர் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.
ஒடிசா அரசு இவரது தலைக்கு ரூ.4 லட்சம் வெகுமதியாக அறிவித்திருந்தது. தற்போது தாமாகவே முன்வந்து ராமே மட்காமி சரணடைந்ததால், அந்த பணம் அவருக்கு வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் ஐந்து மாவோயிஸ்டுகள் கைது!