பரேலி (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலியில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபி-லுப்னா. இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பாபி(மணமகன்) இந்து மதத்தைச் சேர்ந்தவர். லுப்னா(மணமகள்) இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலை வீட்டில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
லுப்னா தன் வீட்டை விட்டு வெளியேறி ஆர்ய சமாஜ் கோயிலில் இந்து முறைப்படி பாபியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், லுப்னா தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
லுப்னா அந்த வீடியோவில், எனது பெற்றோர் தீவிர மத நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் மதம்மாறிய திருமணத்தால் எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், காவல்துறை உயர் அலுவலர் ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், "இவர்கள் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கோட்வாலி காவல் நிலையத்தில் லுப்னாவைக் காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும், பாபி-லுப்னாவிற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்படும்" எனவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!