ETV Bharat / bharat

பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்த இந்தியப் பெண்: 4 மாதங்களுக்கு பிறகு ஒப்படைப்பு

author img

By

Published : Jan 28, 2021, 9:49 PM IST

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த பெண்ணை அந்நாட்டு ராணுவ அலுவலர்கள் இன்று இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

Woman from Poonch crosses over to PoK
பூஞ்ச்

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிக்குள் இந்தியாவைச் சேர்ந்த ஜரீனா பி (36) என்ற பெண் தவறுதலாக நுழைந்துவிட்டார். அவரை பாகிஸ்தான் ராணுவம் தடுப்புக் காவலில் வைத்தது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே சாகன் தா பாக் பகுதியில் இன்று (ஜன.28) ஜரீனாவை பாகிஸ்தான் ராணுவ அலுவலர்கள் இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

சேலா டாங்கிரி என்ற பகுதியைச் சேர்ந்த ஜரீனா நான்கு மாதங்களுக்கு முன்னர் தவறுதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பாக். சிறுமிகள் - பரிசுகளுடன் வழியனுப்பிய இந்திய வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.