ரூர்க்கி: உத்தரகாண்ட் மாநிலம், ரூர்க்கி பகுதியைச் சேர்ந்தவர், முஸ்கான்(பெண்). 40 வயதான முஸ்கான் காவல் நிலையத்தில் தனது இளைய மகனை அடித்துக்கொன்று சூட்கேஸில் வைத்து, கங்கை நதியில் மூத்த மகன் வீசியதாகப் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சூட்கேஸ் ஒன்றை சுமந்து சென்றுள்ளார். அவரை தனது மூத்த மகன் என முஸ்கான் அடையாளம் காட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து முஸ்கானிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பல்வேறு உண்மைகளை வெளியில் கூறினார்.
போலீசார் கூறியதாவது, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் முஸ்கான் தனது மகன் அயன் மற்றும் காசிப் ஆகியோருடன் ரூர்க்கி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். வெளியுலகிற்கு காசிப்பை தனது மூத்த மகனாக காட்டிக் கொண்ட முஸ்கான், உண்மையில் திருமணமத்தை மீறிய உறவில் கடந்த சில ஆண்டுகளாக காசிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவருக்கான உறவில் விரிசல் ஏற்பட்டு தகராறான நிலையில், முஸ்கான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கோபத்தில் முஸ்கானின் உண்மையான மகன் அயனை அடித்துக்கொன்ற காசிப், சூட்கேஸில் சடலத்தை வைத்து கங்கை நதியில் வீசியுள்ளார்.
மேலும் மறுநாள் தனது இளைய மகனை முஸ்கான் தேடிய நிலையில், தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி காசிப் தலைமறைவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காசிப்பை கைது செய்த போலீசார் கங்கை நதியில் வீசப்பட்ட அயனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிகாரில் கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 75ஆக உயர்வு!