பெங்களூரு: கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நேற்று (டிசம்பர் 1) நடந்துள்ளது. இதுகுறித்து மாண்டியா போலீசார் கூறுகையில், அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக உள்ளார். இவரது மனைவி உஸ்னா கவுசர் (30) நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கு முன் தனது மகன் ஹாரிஸ் (7), மகள்கள் அல்லிசா (4) மற்றும் அனம் பாத்திமா (2) ஆகியோருக்கு விஷம் கொடுத்துள்ளார். அதன்பின் இன்று (டிசம்பர் 2) காலையில் 4 பேரும் உயிரிழந்ததை கண்ட அகில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
முதல்கட்ட தகவலில், உஸ்னாவுக்கும், அகிலுக்கும் அடிக்கட்டி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் உஸ்னா மனஉளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலியுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த இளைஞர்