ETV Bharat / bharat

Panipat: பானிபட்டில் சூட்கேஸில் இருந்து பெண் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை - ஹரியானா

Panipat: ஹரியானா மாநிலம், பானிபட்டில் சூட்கேஸில் இருந்து பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 8, 2023, 8:40 AM IST

ஹரியானா(சண்டிகர்): பானிபட் நகரின் அருகே சாலையோரம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? என்பது குறித்தும் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? என்பன உள்ளிட்டவைகள் குறித்து அம்மாநில போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரியானா மாநிலம், பானிபட் நகரில் உள்ள கிரில் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சூட்கேஸ் ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் (மார்ச்.7) கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பானிபட் நகரிலிருந்து ரோஹ்தக் தேசிய நெடுஞ்சாலை வழியாக சிவா என்ற கிராமத்திற்கு செல்லும் பாதையில் துர்நாற்றத்துடன் பார்ப்பதற்கு சந்தேகம் அளிக்கும்படி, ஒரு சூட்கேஸ் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பயணிகள் 112 என்ற எண்ணில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த சூட்கேஸ்ஸை திறந்து பார்த்தபோது அதில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த ​​FSL குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த ஏஎஸ்பி மயங்க் மிஸ்ரா நேரில் அங்கு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் ஒருவித தோல் நோய் பாதிப்புகள் இருந்தாக தெரிய வந்துள்ளதாகவும், அதே நேரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட அப்பெண்ணின் வாயில் டேப் ஒன்றும் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். வழிப்போக்கர்கள் கண்டு தகவல் அளித்த நேரத்திலிருந்து ஏறக்குறைய 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பே அப்பெண் மரணம் அடைந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், யாரோ அந்தப் பெண்ணை கொலை செய்து அவரது உடலை கருப்பு நிற சூட்கேஸில் வைத்து இவ்வாறு தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். சுமார் 45 வயதிலிருந்து 50 வயது வரை மதிக்கத்தக்க இந்த பெண் யார் என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை என்றும் அத்துடன் தற்போது, ​​சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் கொண்டு தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த கொலை குறித்து தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க பெண் சூட்கேஸிலிருந்து சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே, டெல்லி ஷரத்தா கொலை வழக்கு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: சகபயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.