ETV Bharat / bharat

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பாஜக மகளிரணி துணைத் தலைவர் கைது!

author img

By

Published : Jun 13, 2021, 5:21 PM IST

டெல்லி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பாஜக மகளிரணி துணைத் தலைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Woman arrested for sexually assaulting minor in Delhi

டெல்லி துவார்கா பகுதியில், 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணை, அம்மாநில காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வன்கொடுமை செய்ததாக, தனது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த பெண், அதை வீடியோ எடுத்ததோடு, இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என, அந்த பெண் மிரட்டல் விடுத்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பெண், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவருவதும், அரசியல் தலைவர்களுடன் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர், திலக் நகரில் பாஜகவின் மகளிரணி (மகிலா மேர்சா) துணைத் தலைவர் என்பதும் தெரியவந்தது.

ஆம் ஆத்மி கட்சி பிரமுகரும், எம்.பியுமான சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சி எம்.பி மகாபல் மிஸ்ரா ஆகியோருடன் அந்தப் பெண் இருக்கும் புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயர் அலுவலர்களின் மெயில் ஐடி ஹேக்? ஒன்றிய அரசின் எச்சரிக்கையால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.