ETV Bharat / bharat

IAC-1: இந்திய கடற்படைக்கு வலுசேர்க்குமா புதிய விக்ராந்த்!

இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தாக்குதல் வலிமைக்கு நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்த் மிகப்பெரும் வலுவாக அமையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

Vikrant
Vikrant
author img

By

Published : Aug 6, 2021, 7:54 AM IST

Updated : Aug 6, 2021, 12:25 PM IST

டெல்லி: இந்தியத் தொழில்நுட்பத்தில், உள்நாட்டில் தயாரான முதல் விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்தின் சோதனை ஓட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கப்பலைத் தயாரிக்க 2003ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான இக்கப்பலின் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது.

மொத்தமாக 14 தளங்களைக் கொண்டுள்ள இந்தக் கப்பலின் எடை 40 ஆயிரம் டன். நீளம் 262 மீ. அகலம் 62 மீ. உயரம் 59 மீ. 2,300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 1,700 ராணுவ வீரர்கள் தங்கலாம். பெண் அலுவலர்களுக்குச் சிறப்பு அறைகள் உள்ளன.

இக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ்(ஒரு நாட் என்பது 1.1508 கி.மீ.). பயண வேகம் 18 நாட்ஸ். 7,500 மைல்கள் வரை நிற்காமல் செல்லும் திறன்கொண்டது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விராட்

  • இதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. விக்ரமாதித்யா இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலாகும். 20 தளங்கள் கொண்ட இக்கப்பலின் நீளம் 284 மீ. 1,600 ராணுவ வீரர்கள் பயணம் செய்யலாம். எடை 44 ஆயிரத்து 500 டன். இந்தக் கப்பலில் கடற்படையின் போர்க் கப்பல்கள், பல்வகை விமானங்களைத் தரையிறக்கலாம்.
  • விராட் விமானம் தாங்கி கப்பல் பிரிட்டன் கடற்படையிலிருந்து வாங்கப்பட்டு, 1987ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. கப்பலின் எடை 23 ஆயிரத்து 900 டன். நீளம் 226.5 மீ. அகலம் 49 மீ. இதில், 18 விமானங்களை தரையிறக்கலாம். இந்தக் கப்பல் கடந்தாண்டு இந்தியக் கப்பற்படையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது.

தீபகற்ப இந்தியாவிற்கு மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை

இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே பருவா கூறுகையில், "1985-2000ஆம் காலகட்டங்களில் இந்தியக் கப்பற்படைக்கு மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை என்று ஓய்வுபெற்ற கப்பல்படை மூத்த அலுவலர்கள் கோரிக்கைவைத்துவந்தனர். தற்போதும் அது தொடர்கிறது.

ஏனென்றால், அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முப்பெரும் கடல்களைக் கொண்ட இந்தியாவிற்குத் தற்காப்பு, தாக்குதல் வலிமைக்கு மூன்று விமானம் தங்கி கப்பல்கள் தேவைப்படுகின்றன. தற்போது ஐஎன்எஸ் விராட் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பல் தேவைப்படுகிறது. அதில், சூப்பர் சோனிக் ஆயுதங்கள், உயர்தர தொழில்நுட்ப பயன்பாடு, கூடுதல் விமானங்களைத் தரையிறக்கூடிய வசதிகள் இருக்க வேண்டும்.

தற்போதைய நிலைப்படி, 2027ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போதைய விக்ராந்த் இந்திய கப்பற்படைக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார்.

மேலும், சீனா கப்பற்படை இரண்டு விமானம் தாங்கி கப்பல்களைத் தன்வசம் வைத்துள்ளது. சாண்டாங் (70,000 டன்), லியோனிங் (67,500 டன்). அமெரிக்கா 11 உயர் தொழில்நுட்ப விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளது. அதில் பெரும்பாலானவை 1,00,000 டன்களுக்கும் மேல் எடை கொண்டாகும்.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு வந்த நீர் மூழ்கிக் கப்பல்...

Last Updated : Aug 6, 2021, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.