ETV Bharat / bharat

குஜராத்தில் அசாதுதீன் ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு.. - வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

அசாதுதீன் ஒவைசி, அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கியதில் அவர் அமர்ந்திருந்த கோச்-ன் கண்ணாடி உடைந்தது.

குஜராத்தில் அசாதுதீன் ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு

author img

By

Published : Nov 8, 2022, 10:47 AM IST

சூரத் (குஜராத்): குஜராத்தில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி ரயிலில் பயணம் செய்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசினர். கல் வீசியவர்களின் இலக்கு ஒவைசிதான் என்று கட்சியின் தலைவர் வாரிஸ் பதான் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது, ஏஐஎம்ஐஎம் தலைவர், கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் சபீர் கபாலிவாலா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' இல் பயணம் செய்ததாக பதான் கூறினார்.

உடைந்த ஜன்னல் கண்ணாடியின் படங்களைப் பகிர்ந்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான், அசாதுதீன் ஒவைசி, சபீர் கபாலிவாலா மற்றும் எங்கள் குழுவினர் அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரயிலின் மீது கற்களை வீசினர்.

  • आज शाम जब हम @asadowaisi साहब,SabirKabliwala साहब और @aimim_national की टीम अहमदाबाद से सूरत के लिए 'Vande Bharat Express' train में सफर कर रहे थे तब कुछ अज्ञात लोगों ने ट्रेन पर ज़ोर से पत्थर मारकर शीशा तोड़ दिया!#GujaratElections2022 pic.twitter.com/ZwNO2CYrUi

    — Waris Pathan (@warispathan) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதில் ரயிலின் கண்ணாடியை உடைந்தது. இந்த கற்கள் திட்டமிடப்பட்டே வீசப்பட்டதாக அவர் கூறினார். இச்சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பதான், அசாதுதீன் ஓவைசி அமர்ந்திருந்த கோச் மீது இரண்டு முறை கற்கள் வீசப்பட்டதாக கூறினார்.

இன்று அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்தோம். நாங்கள் சேர வேண்டிய இடத்திலிருந்து 20 முதல் 25 கிமீ தொலைவில் இருந்தபோது, கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. ஓவைசி அந்த கோச்சில் அமர்ந்திருந்தார். உரிமைக்காகக் குரல் கொடுக்கும் எங்களின் குரலை கல்லெறிந்து நசுக்க முடியாது என்று பதான் கூறினார்.

காந்திநகர் - மும்பை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி காந்திநகரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒவைசி அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தேவ் தீபாவளி 2022: விளக்கொளியில் ஜொலித்த வாரணாசி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.