ETV Bharat / bharat

ஃபேஸ் சீரமை கண்களுக்குப் பயன்படுத்தலாமா? - தோல் மருத்துவர்

ஃபேஸ் சீரம், கண் கிரீம் உள்ளிட்ட எந்தவித அழகுசாதனப் பொருட்களை வாங்கும் முன்பும், தோல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது என பிரபல தோல் மருத்துவர் ப்ரீத்தி ஷெனாய் தெரிவித்தார்.

Will
Will
author img

By

Published : Sep 21, 2022, 9:32 PM IST

டெல்லி: சருமப் பிரச்னைகளுக்குப் பல்வேறு தீர்வுகள் தற்போது கிடைக்கின்றன. கிரீம், சீரம், தைலம், மாய்ஸ்சரைசர், டோனர் உள்ளிட்டப் பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் சிலர் ஒரு கிரீமை வாங்கி, பல்வேறு வகையில் பயன்படுத்துவார்கள். சான்றாக, முகத்துக்கு வாங்கிய கிரீமை கண்களுக்கும் பயன்படுத்துவது போன்றவற்றை செய்கிறார்கள்.

உண்மையில் நாம் ஒரு சீரமையோ, கிரீமையோ வாங்கியாக வேண்டுமா? முகத்துக்குப் பயன்படுத்தப்படும் சீரமை கண்களுக்கு பயன்படுத்தலாமா? உள்ளிட்ட நமது கேள்விகளுக்கு, மும்பையில் உள்ள முன்னணி தோல் மருத்துவமனையான ஸ்கின்வொர்க்ஸின் நிறுவனர் டாக்டர் ப்ரீத்தி ஷெனாய் பதிலளித்தார். அவற்றை இப்போது பார்க்கலாம்...

ஃபேஸ் சீரம் என்பது என்ன?

ஃபேஸ் சீரம், முகத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. சீரம் பொதுவாக அடர்த்தி குறைவாக தண்ணீர் போலவே இருப்பதால், அவை சருமத்தில் ஊடுருவிச்செயல்படும். சீரத்தில் ஸ்கின் லைட்டனிங் ஏஜென்ட்ஸ், எக்ஸ்ஃபோலியேட்டிங் ஆசிட், விட்டமின்ஸ் மற்றும் பல உட்பொருட்கள் உள்ளன. இதனால், முகத்திற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண கிரீம்களை விட, சீரம் நன்றாக செயல்படும்.

ஃபேஸ் சீரமை கண்களுக்குப் பயன்படுத்தலாமா?

முகத்தில் உள்ள பிற இடங்களைவிட கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதி மிகவும் மென்மையானது. அதனால், கருவளையம், கரும்புள்ளி உள்ளிட்ட பல ஏஜிங் ஃபேக்டர்கள்(Aging Factors) கண்ணைச்சுற்றி அதிகம் தென்படும். அப்பகுதியை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது அவசியம். ஒரு சில ஃபேஸ் சீரம்கள், கண் பகுதிகளில் கடுமையாக இருக்கலாம்.

கிளைக்காலிக் ஆசிட், சாலிசிலிக் ஆசிட் உள்ளிட்ட ஆக்டிவ் உட்பொருட்களைக்கொண்ட சீரம்கள், கண்களுக்கு ஏதுவாக இருப்பதில்லை. அவற்றை கண் பகுதிகளைத் தவிர்த்து முகத்தில் மட்டும் பயன்படுத்துவது நல்லது.

கண் கிரீம் என்பது என்ன? அவை ஃபேஸ் கிரீம் மற்றும் சீரத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?

கண்களைச்சுற்றி ஏற்படும் தோல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை கண் கிரீம். இவை முகத்தில் ஏற்படும் கருவளையம், சுருக்கங்கள், சிறிய கொப்புளங்கள் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளிக்கும்.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஃபேஸ் கிரீம் மற்றும் ஃபேஸ் சீரம் நன்றாக செயல்படாது. கண் கிரீம்கள் ஃபேஸ் கிரீம்களை விட அடர்த்தியாக இருக்கும், அதேபோல் ஃபேஸ் சீரம்களை விட எண்ணெய்ப்பசையுடன் இருக்கும். அவை மிகவும் மென்மையானவை, கண்களுக்கு ஏற்ற உட்பொருட்களைக்கொண்டிருக்கின்றன.

ஒருவர் கண் கிரீமை வாங்க வேண்டுமா?

கண்களில் உள்ள கருவளையத்தைப் போக்க, சுருக்கங்களை நீக்க வேண்டும் என்றால், கண் கிரீமை வாங்கலாம். ஆனால், எந்த கிரீமை வாங்குவதற்கு முன்பும், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களது குறிப்பிட்ட தோல் பிரச்னைகள், சருமத்தின் வகை உள்ளிட்டவற்றிற்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் கிரீமை பரிந்துரை செய்வார்கள்.

இதையும் படிங்க: உடல் பருமனால் அல்சைமர் நோய் ஏற்படுமா? - நிபுணர்கள் கவலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.