ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கட்டாய திருமணப் பதிவு (திருத்தம், 2019) மசோதா கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அனைத்து விதமான திருமணங்களும் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். மேலும், திருமணம் செய்துகொள்பவர்கள் மைனராக (ஆண் - 21, பெண் - 18) இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் திருமணம் நடந்த 30 நாள்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என இம்மசோதாவில் குறிப்பிட்டுள்ளது.
இதனால், குழந்தை திருமணம் அதிகரிக்கும் என மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையம் கடும் கண்டனத்தை பதிவு செய்து, மசோதாவை திரும்பப் பெற கோரிக்கை விடுத்தது. மேலும், பல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இந்த மசோதாவை எதிர்த்து பெரும் எதிர்ப்பை முன்னிறுத்தி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
சர்ச்சை தணித்த முதலமைச்சர்
இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது, "ராஜஸ்தானில் தற்போது, திருமணப் பதிவு மசோதா நிறைவேற்றபட்டதையொட்டி சர்ச்சை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றம் திருமணங்கள் உத்தரவின்பேரில்தான், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், ஆளுநரிடம் அந்த மசோதாவை திருப்பி அளிக்கும்படி கூறியுள்ளோம். பின்னர், அந்த மசோதாவை ஆய்வுசெய்ய உள்ளோம்.
அவசியம் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். ராஜஸ்தானில் குழந்தை திருமணம் நடக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்காது - பூபேஷ் பாகல்