ஹைதராபாத்: ஹைதராபாத் மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ககன் அகர்வால். உள் அலங்கார வேலை செய்யும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, நவுஷியன் பேகம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
ககன் அகர்வாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ககன் அகர்வால் தனது நண்பர் சுனிலுடன் சேர்ந்து மது அருந்திய போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பேகம், சுனில் உதவியோடு தனது கணவரைக் கொலை செய்து, அவரின் உடலைத் தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு அவர் காணாமல் போனதாக நாடகமாடியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை செய்தபோது, நவுஷியன்தான் ககன் அகர்வாலைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் குடித்துவிட்டு மகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதால் கணவரை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: காதல் விவகாரம்..? நாமக்கல்லில் இளைஞர் அடித்து கொலை