ETV Bharat / bharat

Valli Arunachalam: யார் இந்த வள்ளி அருணாச்சலம்? - முருகப்பா குழுமத்தில் இவரது முக்கியத்துவம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 9:26 PM IST

Who is Valli Arunachalam? எம்வி முருகப்பனின் மூத்த மகளான வள்ளி அருணாச்சலம் யார், முருகப்பா குழுமத்தில் அவரது முக்கியத்துவம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹைதராபாத்: எம்வி முருகப்பனின் மூத்த மகளான வள்ளி அருணாச்சலம் முருகப்பா குடும்ப உறுப்பினர்கள் இடையேயான பிரச்னை குறித்து கூறுகையில், “எனது தந்தையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முருகப்பா குழுமத்தில் இடம் பெறுவதற்காக போர் நடந்தது. நான் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும், பாலின பாகுபாட்டிற்கு எதிராகவும் இன்னும் போராட வேண்டி இருக்கிறது” என தனது லிங்குட் இன் (Linkedin) தளத்தில் தெரிவித்து இருந்தார்.

யார் இந்த வள்ளி அருணாச்சலம்? சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை மற்றும் எம்பில் பட்டம் பெற்ற வள்ளி அருணாச்சலம், டெக்சாஸ் ஏ மற்றும் எம் (Texas A&M University) பல்கலைக்கழகத்தில் அனு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று உள்ளார்.

அது மட்டுமல்லாமல், இதற்காக ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்பித்து உள்ளதாக அவரது லிங்குட் இன் தளத்தின் சுயகுறிப்பு பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். கிட்டத்தட்ட 25 வருட காலம் அனு விஞ்ஞானி மற்றும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.

இவர் செமிகண்டக்டர் தொழிலில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய ஆய்வகங்களில் திட்டமிடல் தொடர்பான திட்டங்களை வகுப்பதற்கு தலைமை தாங்கி உள்ளார். தற்போது எம் மற்றும் ஏவில் உயர்தர தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

அதிலும், சர்வதேச அளவில் பிரபலமான Apogee Research Forum, IBM Research Alliance மற்றும் Texas Instruments and Motorola Solutions ஆகிய நிறுவனங்களிலும் வள்ளி அருணாச்சலம் பணிபுரிந்து வந்து உள்ளார்.

முருகப்பா குழுமத்தில் வள்ளி அருணாச்சலம்: முருகப்பா குழுமத்தின் (Murugappa Group) தலைவராக இருந்து நிர்வகித்து வந்த எம்வி முருகப்பன், கடந்த 2017ஆம் ஆண்டு காலமானார். அதன் பின்புதான் அவரது மூத்த மகளான வள்ளி அருணாச்சலம், அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழுவில் தன்னை இயக்குநராக நியமிக்குமாறு கேட்டார்.

ஆனால், அவருக்கு அதற்கான அதிகாரம் மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது வெளியே வந்து கொண்டு இருந்தன. இருப்பினும், முருகப்பா நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த பிரச்னை அடிக்கடி வெளி உலகத்தில் தலை தூக்கியதால், அம்பதி நிர்வாக குழுவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வள்ளி அருணாச்சலம் தெரிவித்து இருந்தார்.

சுமூக புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்த நிலையில், முருகப்பா குழுமத்தின் குடும்பத்தினருக்கு இடையேயான பிரச்னைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு உள்ளதாக முருகப்பா குழுமம் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், பங்கு பிரிவினை உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, முருகப்பா குழும குடும்ப உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முருகப்பா குழுமம்: முருகப்பா குழுமத்தில் பாரிஸ் சர்க்கரை, சோழமண்டலம் பைனான்ஸ், டிஐ சைக்கிள்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சோழமண்டலம் இன்சூரன்ஸ், கோரமண்டல் இன்ஜினியரிங், சாந்தி கியர்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷனல் உரக் கம்பெனி உள்ளிட்ட 28 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த முருகப்பா குழுமமானது சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

இதையும் படிங்க: Murugappa Group : முருகப்பா குழும குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு.. புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.