ETV Bharat / bharat

COMPOSA: மாவோயிஸ்ட் கட்சி திடீர் அரசியல் நகர்வு.. தெலங்கானா உளவுத்துறை எச்சரிக்கை

author img

By

Published : Jan 2, 2023, 10:15 PM IST

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சி, வெளிநாடுகளை சேர்ந்த கிளர்ச்சி அமைப்புகளுடனான தொடர்பை புதுப்பிக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்திற்கு தலைவராக அம்ரீத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

மாவோயிஸ்ட்
மாவோயிஸ்ட்

ஹைதராபாத்: கடந்த 2004ஆம் ஆண்டு மக்கள் போர் அமைப்பு மற்றும் மாவோயிஸ்ட் ஆகியோர் இணைந்து மாவோயிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. மார்க்சிசம், மாவோயிசம், லெனினிசம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மாவோயிஸ்ட் கட்சி அறிவிக்கப்பட்டது. தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் கம்போசாவில் (COMPOSA) இந்த கட்சிகள் அங்கம் வகித்தன.

நேபாளம், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் மாவோயிஸ்ட் கட்சி இணக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இருந்து, மாவோயிஸ்ட் கிளர்ச்சி படையினருக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசால் மாவோயிஸ்ட் கட்சி, பயங்கரவாத தடை சட்டமான உபாவில் தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் மாவோயிஸ்ட் கட்சிக்கு தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெட்டவெளி அரசியலில் இருந்து அந்த அமைப்பு பின் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் முக்கியத் தலைவர்கள் கைது மற்றும் என்கவுன்ட்டர் உள்ளிட்ட காரணங்களால் மாவோயிஸ்ட் கட்சி பின்னடைவை சந்தித்து வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் கோபத் காந்தி 2009ல் கைது, 2010ஆம் ஆண்டு அடிலாபாத் வனப்பகுதியில் ஆசாத் என்கவுன்ட்டர், மற்றும் கிஷன்ஜி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களால் மாவோயிஸ்ட் கட்சி மறைவு வாழ்க்கைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் வெளிநாட்டு கிளர்ச்சி அமைப்புகளுடனான அந்தக் கட்சியின் உறவும் ஏறத்தாழ துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில், மாவோயிஸ்ட் கட்சியின் வெளிவிவகார கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு கிளர்ச்சி அமைப்புகளுடன் மீண்டும் உறவை மேம்படுத்த நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாவோயிஸ்ட் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவில் மீண்டும் உறவை வலுப்படுத்த மாவோயிஸ்ட் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிலிப்பைன்ஸ் கிளர்ச்சி அமைப்புகளைத் தொடர்பு கொண்டு மாவோயிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்தியதாகவும், மற்ற அமைப்புகளுடன் தனியாக ஆன்லைன் ஜூம் கால்கள் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதற்கு சான்றாக கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்த பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் தலைவர் ஜோஸ் மரிய சிசன் மறைவுக்கு, வரும் 16ஆம் தேதி மாவோயிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவோயிஸ்ட் கட்சியின், வெளிநாட்டு கிளர்ச்சிக் குழுக்களுடனான உறவு புதுப்பித்தல் திட்டத்திற்கு அம்ரீத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், யார் அந்த அம்ரீத் என விசாரித்ததில், மாவோயிஸ்ட் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைமைக் குழுவின் உறுப்பினர்கள் குழுவில் ஒருவராக இருக்கக் கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக தெலங்கானா உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழர்கள் காட்டும் அன்பை வேறு யாரிடமும் கண்டதில்லை - ராகுல்காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.