ETV Bharat / bharat

ஷாம்பூவால் நின்ற திருமணம்... காரணம் கேட்டு மிரண்ட மணப்பெண் வீட்டார்... - அசாம்

அசாம் மாநிலத்தில் சன்சில்க் ஷாம்பூ உள்பட தரமற்ற பொருட்களை பரிசாக வழங்கியதாக மணப்பெண் கடிந்து கொண்டதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஷாம்பூ
ஷாம்பூ
author img

By

Published : Dec 17, 2022, 7:25 PM IST

அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த இன்ஜினியர் மாப்பிள்ளைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு இரு நாட்களே இருந்த நிலையில், மணமகளுக்கு பரிசுப் பொருட்களை மாப்பிள்ளை வழங்கி உள்ளார்.

அதில் சன்சில்க் ஷாம்பூ உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு வெகுண்டு எழுந்த மணப்பெண், தரமற்ற பொருட்களை தனக்கு பரிசாக அளித்ததாக மாப்பிள்ளையை வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், காஸ்ட்லி பொருட்களை வாங்கித் தரும் அளவுக்கு தங்களுக்கு வருமானம் இல்லையா என மணப் பெண் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்தினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணமகள் வீட்டார், மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து மணமகள் வீட்டார் அளித்த புகாரில் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சன்சில்க் ஷாம்பூ ஒரு திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கல்யாணம் ஆகாமல் இரட்டை குழந்தைக்கு தாய்.. சூரத் பெண்ணின் துணிச்சல் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.