ஹைதராபாத் : ஆண்ட்ராய்டில் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு ரகசிய குறியீட்டை உருவாக்கும் புதிய பக்கத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரகசிய குறியீட்டை உருவக்குவது, லாக் செய்யப்பட்ட சேட்களை எளிதில் கண்டறிய உதவுகிறது.
கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள மெட்டாவின் வாட்ஸ் அப் நிறுவனம், சமீக காலங்களில் புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பின் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு ரகசிய குறியீட்டை உருவாக்கும் புதிய பக்கத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த ரகசிய குறியீடு லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு தனிப்பட்ட பாஸ்வோர்டு வசதியை அளிக்க அனுமதிக்கிறது.
WABetaInfo படி, வாட்ஸ் அப் ஒரு புதிய பக்கத்தை அறிமுகப்படுத்துகிறது. இது பயனாளர்களின் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு ரகசிய குறியீட்டை அளிக்கிறது. இந்த ரகசிய குறியீடு போடுவதன் மூலம் லாக் செய்யப்பட்ட சேட்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.
இதையும் படிங்க: "பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!
மேலும், பயனாளர்கள் வாட்ஸ் அப்பை லேப்டப், கணினி போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்கும் பொழுதும், லாக் செய்யப்பட்ட சேட்களை அவை அனுமதிக்கின்றன. இணைக்கப்பட்ட சாதனங்களில் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கான ரகசிய குறியீடு உருவாக்கும் புதிய முறை தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் இது ஆப்பின் எதிர்கால அப்டேட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பல நாடுகளில் வாட்ஸ் அப் வசதி இல்லாத நிலையில், இவை புதிய அம்சத்தை வெளியிடுகிறது. இது ஆண்ட்ராய்டில் தங்கள் சேனல்களின் நிலையைப் பற்றி படைப்பாளர்களுக்குத் அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம், சில நாடுகளில் சட்டத் தேவைகள் காரணமாக சேனலின் தகவல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை சேனல் உருவாக்கியவருக்கு அறிவிக்க அனுமதிக்கிறது.
இதையும் படிங்க: எம்.பி. ஜெகத்ரட்சகன் : நான்காவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை! ரூ.16 கோடி சிக்கியதாக தகவல்!