ETV Bharat / bharat

பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? டி.ஆர்.பாலு கேள்விக்கு அரசு பதில்!

author img

By

Published : Mar 9, 2021, 12:50 PM IST

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு, சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதியுதவி போன்ற பல திட்டங்களின் மூலம் வீழ்ந்த பொருளாதாரம் மேம்படும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

tr balu
tr balu

மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூரிடம், 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறியீடு 7.7% வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர், ” நோய்த் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க, பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதியுதவித் திட்டம், தொழிற்சாலைகளுக்கான நில வங்கித் திட்டம், மற்றும் புதிய மின்சாரக் கட்டணக் கொள்கைகள், இவற்றின் மூலம், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

13 துறைகளில் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களும், 7,400 தேசிய கட்டமைப்பு திட்டங்களும், ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்சார வசதிகளும், காப்பீட்டுத் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்களை வலுப்படுத்தவும், கூட்டுறவுத் துறைகளை மேம்படுத்தவும், தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளைபொருள்களின் உற்பத்தி விலையில், ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த தேவையான முதலீடுகளை அதிகரிக்கவும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு, ரூபாய் 15,700 கோடி அளவிற்கு, மத்திய அரசு உதவிகள் செய்துள்ளது.

தேசிய ஆராய்ச்சி திட்டத்திற்காக, ரூபாய் 50,000 கோடி நிதி உதவியும், ககன்யான் திட்டம், ஆழ் கடல் ஆராய்ச்சித் திட்டம், கணினி வழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ரூபாய் 3,708 கோடி ஒதுக்கீடு, தேயிலை தொழிலாளர்களின் நலத்திற்காக ரூபாய் 1,000 கோடி என பல்வேறு திட்டங்களின் மூலம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: 'சர்வதேச ஆண்கள் நாளும் கொண்டாடப்பட வேண்டும்' - பாஜக பெண் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.