ஹைதராபாத் : உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் காவி முகமாக அறியப்பட்டவர் கல்யாண் சிங். இவரின் ஆட்சியில் 1999இல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.
அப்போது நடந்த அசம்பாவிதங்கள் காவி கட்சியை விட்டு கல்யாண் சிங் காலி செய்ய வழிவகுத்தது. வலுகட்டாயமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கல்யாண் சிங் ஜன் கிரந்தி கட்சியை உருவாக்கினார். இந்தக் கட்சி பாஜகவுக்கு பெரும் சவாலாக விளங்கியது. உண்மையில் பாஜகவின் வாக்குகளை சிதறடித்தது.
இதனால் பாஜகவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை 2012 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆணித்தனமாக உணர்ந்தது. ஏனெனில் அத்தேர்தலில் 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை காட்டிலும் குறைவாக இடங்களே (47) பாஜகவுக்கு கிடைத்தது.
ஒருவருக்கொருவர் தங்களது பலம், வீழ்ச்சியை உணர்ந்த பின்னர், இருவரும் ஒன்றிணைந்தனர். இதன் பின்னால் அப்போதைய உத்தரப் பிரதேச பாஜக பொறுப்பாளர் அமித் ஷாவின் பங்கு இருந்தது. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கல்யாண் சிங்கை பாஜகவுக்குள் மீண்டு(ம்) வந்தார்.
அடுத்து மக்களவை தேர்தல். இதில் பாஜக அசூர வெற்றி பெற்றது. ஆம் 2014இல் உத்தரப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 80 மக்களவை தேர்தலில் 73 தொகுதிகளை வென்றது. இதில் கூட்டணி கட்சியான அப்னா தளத்துக்கு இரு தொகுதிகள் கிடைத்தன. மீதமுள்ள 71 தொகுதிகள் பாஜக வசம் சென்றன.
இந்த வெற்றி 2017 சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலித்தது. பாஜக அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இது குறித்து அரசியல் விமர்சகர் விஜய் சங்கர் பங்கஜ் கூறுகையில், “ராமர் கோயில் இயக்கம் கல்யாண் சிங்குக்கு மாபெரும் வலிமையை பெற்றுக்கொடுத்தது.
தனக்கு முன் மற்ற தலைவர்கள் தகுதி அற்றவர்கள் என அவர் கருதத் தொடங்கினார். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் கட்சியில் அவருக்கு ஏற்பட்டன. இந்த இடைவெளி மற்ற கட்சிகள் வளர காரணமானது.
கல்யாண் சிங்கின் வளர்ச்சியே அவரது வீழ்ச்சிக்கு காரணமானது. பாஜகவிலிருந்து வெளியேறினார், தனிக்கட்சி தொடங்கினார். இது இரு கட்சிகளும் இழப்பை ஏற்படுத்தியது. 2002 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 88 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சமாஜ்வாதி 143 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 98 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தொடர்ந்து 2002இல் கல்யாண் சிங் பாஜகவில் இணைந்தார். தான் ஒரு மூத்தத் தலைவர் எனக் கூறி மீண்டும் கட்சியை வழிநடத்த முயன்றார். அவரது தலைமையை மற்ற தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை ஒரு வெளியாள் என்று வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
அதன் பின்னர் 2007 சட்டப்பேரவை தேர்தலும் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாயாவதி வலுவான தலைவரானார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அடுத்து 2009இல் கல்யாண் சிங் முலாயம் சிங் யாதவ்வுடன் கைகோர்த்து செயல்பட்டார். கல்யாண் சிங்- முலாயம் சிங் இடையேயான நட்புறவை சமாஜ்வாதி கட்சி மூடிமறைத்தது. இந்நிலையில் அங்கிரும் கல்யாண் சிங் வெளியேறினார்.
2009 மக்களவை தேர்தலும் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. இந்நிலையில்தான் 2012ஆம் ஆண்டு கல்யாண் சிங் தனது கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமையாக முன்னிறுத்தினார். அப்போது பாஜக கடும் இழப்பை சந்தித்தது.
பாஜக வாக்கு வங்கி வெகுவாக குறைந்தது. அக்கட்சியால் வெறும் 47 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது 1991ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை விட குறைவாகும். இம்முறை கல்யாண் சிங்கினால் சமாஜ்வாதி ஆட்சிக்கு வரும் வாய்ப்பை பெற்றது.
அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். இத்தேர்தல் பாஜகவுக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது” என்றார்.
இதற்கிடையில் அமித் ஷா முயற்சியால் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜகவில் கல்யாண் சிங் மீண்டும் இணைந்தார். இது குறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான பி.என். திவேதி கூறுகையில், “2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக கல்யாண் சிங் பாஜகவில் இணைந்தது தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் இது பாஜக முன்னிலை பெற வழிவகுத்தது.
உத்தரப் பிரதேச சாதி அரசியலை விடவும் கல்யாண் சிங் உயர்ந்து காணப்பட்டார். ஆனால் இதில் மற்றொரு உண்மையும் உள்ளது. கல்யாண் சிங் லோத் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கல்யாண் சிங்கை தங்களின் அடையாளமாக, தலைவராக பார்த்தனர்” என்கிறார்.
இதையும் படிங்க : 'அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் என் கனவு நிறைவேறியது' - கல்யாண் சிங்