நாடு முழுவதும் கரோனா பரவல் வேகமாகப் பரவிவரும் நிலையில், மேற்கு வங்கத்தின் ஐந்தாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
57,23,766 ஆண்கள், 56,11,354 பெண்கள், 224 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,13,35,344 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற காத்திருக்கின்றனர்.
மொத்தம், 29 தேசிய மற்றும் மாநில கட்சிகளைச் சேர்ந்த 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆறு மாவட்டங்களில், 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறவுள்ள 45 தொகுதிகளில் 9 தொகுதிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறிப்பட்டுள்ளன. அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிபார்ம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, களத்தில் உள்ள 25 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலவையில் உள்ளன. 20 விழுக்காடு வேட்பாளர்கள் மீது தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிகபட்சமாக, பாஜக சார்பாக போட்டியிடும் 28 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாதுகாப்புக்காக மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.