ETV Bharat / bharat

மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் விவகாரம்: மத்தியப் படைகளை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்த வழக்கை விசாரிக்க அனுமதி - மத்திய பாதுகாப்பு படை

மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் மத்தியப் படைகளை அனுப்புமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு (எஸ்இசி) உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 20, 2023, 2:07 PM IST

புது டெல்லி: உச்சநீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் சூர்யாகாந்த் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு கொல்கத்தா உயர்நீதிமன்ற சிறப்பு விடுப்புக்கு அனுமதி அளித்தது. சிறப்பு விடுப்பு மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் ஆணையத்தை சேர்ந்த மீனாட்சி அரோரா மனுத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுப்படி, மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலுக்கு மத்திய பாதுகாப்பு படைகளை 48 மணி நேரத்துக்குள் அனுப்புமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

ஜூன் 13ஆம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொள்ளாததாலும், மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்பாததாலும் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் ஜூன் 13அம் தேதி மற்றும் ஜூன் 15ஆம் தேதி அளித்த 2 உத்தரவுகளுக்கு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக ஜூன் 13ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்புமாறு உத்தரவிட்டது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி அளித்த உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் பிஜேபியை சேர்ந்த சுவேண்டு அதிகாரி என்பவர் பஞ்சாயத்து தேர்தல் அமைதியாக நடக்க மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டும் என மனுத் தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: சிவசேனா நிறுவன நாள் - உத்தவ், ஷிண்டே தலைமையில் தனித் தனியாக கொண்டாட்டம்!

இதனையடுத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 2022ஆம் ஆண்டு நகராட்சி தேர்தல் மற்றும் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின் போது வன்முறை நடந்ததாக கூறியிருந்தனர். ஜூலை 8ஆம் தேதி தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின் போது மாநில தேர்தல் ஆணையம் மத்திய பாதுகாப்பு படையை அனைத்து மாநிலங்களுக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக மத்திய அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூடுதல் மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் 13ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மத்திய கூடுதல் பாதுகாப்பு படையை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் போதுமான போலீஸ் படைகள் உள்ளது குறித்து உறுதி செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக மேலவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜெகதீஷ் ஷெட்டர், போஸ்ராஜூ அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.