ETV Bharat / bharat

பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற மம்தா

மேற்கு வங்கம்: பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார்.

மம்தா
மம்தா
author img

By

Published : Oct 7, 2021, 4:57 PM IST

Updated : Oct 7, 2021, 5:16 PM IST

மேற்கு வங்கம், பவானிபூர் இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சரும் திரிணாமூல் தலைவருமான மம்தா வெற்றிபெற்ற நிலையில், இன்று (அக்.07) அவருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் இணைந்து அமீருல் இஸ்லாம், ஜாகிர் ஹுசைன் ஆகியோரும் இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பவானிபூர் இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மம்தா பானர்ஜி 85,263 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மம்தா
மம்தா

மம்தாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் முக்கியமானவரான பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால், 26,428 வாக்குகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் 4,226 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலும், ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற ஜாகிர் ஹுசைன், அமீருல் இஸ்லாம் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

மம்தா
மம்தா

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதேபோல மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டிருந்தனர். இருந்தாலும்கூட அங்கு பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால், அதேநேரம் நந்திகிராம் தொகுதியின் முடிவுகள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அவருக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவியது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி மம்தா, இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தார்.

பதவியேற்ற மம்தா பானர்ஜி
பதவியேற்ற மம்தா பானர்ஜி

இதனால், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமலேயே மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சட்டப்படி சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதலமைச்சராக பதவியேற்றால், அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும். மம்தா போட்டியிட ஏதுவாக பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணாமூல் அமைச்சர் ஷோவன்தேவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் மம்தா அமோக வெற்றிபெற்று எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளார்.

இதையும் படிங்க: "கொலை ராஜ்ஜியம்" நடத்தும் உத்தரப் பிரதேச அரசு - மம்தா சாடல்

Last Updated : Oct 7, 2021, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.