ETV Bharat / bharat

அரசுத் திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் - மேற்குவங்க அரசு முடிவு! - குறுகிய கால பயிற்சியால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்தவித பயனும் இல்லை

அரசுத் திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய குறுகிய காலப் பயிற்சிகளை வழங்க மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.

West Bengal
West Bengal
author img

By

Published : Jun 22, 2022, 4:52 PM IST

மேற்குவங்க மாநிலத்தில் அரசு செயல்படுத்தும் திட்டங்களில், கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய குறுகிய காலப் பயிற்சிகளை (Paid internships) வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மாநில அரசு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த குறுகிய காலப்பயிற்சியால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்தவிதப் பயனும் இல்லை என்றும், இந்தப் பயிற்சிகளை தந்து நிரந்தர வேலைவாய்ப்புகளை அரசு மறுக்கிறதா? என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த பயிற்சி மாணவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வாங்கித் தரும் என்று அர்த்தம் இல்லை என்றும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் கடமையை அரசு தட்டிக் கழிக்கிறது என்றும் இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியது.

அதேநேரம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த குறுகிய காலப்பயிற்சிகள் உதவியாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பயிற்சி சான்றிதழ் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பைப் பெற உதவுமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.