ETV Bharat / bharat

பீகாரில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்.. காங்கிரஸ் கொடுத்த ஷாக்! - ராகுல் காந்தி

ஜூன் 12 ஆம் தேதி பீகாரில் நடக்கும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

Congress
Congress
author img

By

Published : May 29, 2023, 6:07 PM IST

முர்ஷிதாபாத் : பீகாரில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டு உள்ளார்.

டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, இடது சாரிகள், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம், டெல்லி ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து இருந்தன. மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், பாட்னா எதிர்க்கட்சிகளின் மகா ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் இருக்கும் நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒரு அணியாக திரட்டு பணியில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பிரதமர் மோடியை தோற்கடிக்க வாய்ப்பு ஏற்படும். இதையே காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே கூறி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள சிலர் இதை ஒப்புக்கொள்கிறார்கள், சிலர் ஏற்கவில்லை. காங்கிரசுடன் இணைவதில் சில பிராந்திய கட்சிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை காண முடிகிறதாக தெரிவித்தார்.

அதேநேரம், தேசிய அரசியலுக்காக திரிணாமுல் காங்கிரசுடன் ஒன்றிணைந்து போனாலும், மாநில அரசியலில் அந்த கட்சிக்கு கடும் சவால்களை அளிக்கக் கூடிய எதிர்க் கட்சியாக இருப்போம் என்றார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் வார்த்தைக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மதிப்பு அளிப்பதாக தெரிவித்தார்.

அனைத்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தால் அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்டாயம் கலந்து கொள்ளும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

இதையும் படிங்க : "குடியரசு இறந்துவிட்டது.. கடவுளே அரசரை காப்பாற்றுவார்.." திரிணாமுல் எம்.பி. கூறியது யாரை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.