கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்த இஸ்லாமிய வாக்குகள் குறித்த கருத்துகளுக்காக, நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மம்தா பரப்புரை செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் முன்னதாக உத்தரவிட்டது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தாவிலுள்ள காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பற்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தர்ணா போராட்டத்தில் மம்தா ஈடுபடுவதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவளித்து ட்வீட் செய்திருந்தார்.