மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஆக 5) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, ஆளுநர் அதிகாரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். முன்னதாக, நேற்று (ஆக 4) திருணாமுல் காங்கிரஸ் எம்பிக்களை சந்தித்து, நாடாளுமன்றத் கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வுகள், மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்.
டெல்லியில் நிதி ஆயோகின் 7ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் விவசாயம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் டெல்லி செல்கின்றனர். அந்த வகையிலேயே மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நிதி ஆயோகின் 7ஆவது கூட்டம்