ஹைதராபாத்: மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெறும் நான்காம் கட்ட தேர்தல் 373 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறது.
மம்தா பானர்ஜியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவின் ஒட்டுமொத்த தலைவர்களும் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக உள்ளார். அவரின் வெற்றியை தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டுவருகிறது.

நடிகர் மிதுன் சக்கரபோர்த்தி பாஜகவில் இணைவதற்கு முன்பே ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஏடிஆர் (Association of Democratic Reforms) புள்ளிவிவர தகவலின்படி தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 44 தொகுதிகளில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அதிகமுள்ளன.

பாதுகாப்பு பணியில் 944 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2019 மக்களவை தேர்தலின்போது 842 கம்பெனி துணை ராணுவ படையினர் களமிறக்கப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.