புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் கொன்னகாவளி கிராமத்தில் புதிய களையெடுக்கும் கருவியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியின் பேராசிரியர் அனந்தகுமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் 50 ரூபாய் செலவில் களையெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்த விருத்தாசலம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை உழவர் சுசீந்திரன், அதன் செயல்முறை விளக்கத்தைச் செய்து காட்டினார். பின்னர் களையெடுக்கும் கருவி குறித்த சந்தேகங்களை உழவர்களுக்கு அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: காவலர் உடற்பயிற்சி உபகரணங்கள்; ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு!