ETV Bharat / bharat

கயாவில் ஐசியுவில் நடந்த திருமணம் - காரணம் இதுவா? - தாயின் கடைசி ஆசைக்காக ஐசியுவில் திருமணம்

பீகாரில் கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியு வார்டில் திருமணம் நடந்துள்ளது. மணமகளின் தாய் மரணப்படுக்கையில் இருந்தபோது கடைசி ஆசை என்று கேட்டதால் இவ்வாறு திருமணம் நடந்தது.

wedding
wedding
author img

By

Published : Dec 26, 2022, 8:33 PM IST

கயா: பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமாரின் மனைவி பூனம் வர்மா கடந்த சில மாதங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று(டிச.25) திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐசியுவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என பூனம் வர்மா கேட்டுள்ளார்.

பூனம் வர்மாவின் மகள் சாந்தினி குமாரிக்கு இன்று (டிச.26) நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அவரது கடைசி ஆசை என்பதால், ஒரு நாள் முன்னதாக நேற்று ஐசியுவிலேயே பூனம் வர்மாவின் கண் முன்னே திருமணம் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்திலேயே பூனம் வர்மா இறந்துவிட்டார். இதனால் திருமண வீடு முழுவதும் துக்கம் பரவிவிட்டது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் முக கவசம் கட்டாயம் - நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.