ETV Bharat / bharat

கேரளா மெஸ்சி கட்-அவுட்டுக்கு போட்டியாக 35அடியில் நெய்மர் கட்-அவுட்! - கேரளா’

கேரளாவில் வைக்கப்பட்ட 30 அடி மெஸ்சி கட்-அவுட்டுக்குப் போட்டியாக அதற்கு அருகே 35அடிக்கு பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மரின் கட்-அவுட், அப்பகுதி ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.

கேரளா மெஸ்சி கட்-அவுட்டுக்கு போட்டியாக 35 அடியில் நெய்மர் கட் அவுட் ..!

author img

By

Published : Nov 3, 2022, 10:22 PM IST

கேரளா: தற்போது உலகெங்கும் டிரெண்டாகி வரும் மலபாரின் 30 அடி மெஸ்ஸி கட் அவுட் மலபார் மக்களை பெருமைகொள்ள செய்துள்ளது. சமீபத்தில், கோழிக்கோடிலுள்ள அர்ஜெண்டினா ரசிகர்கள் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்காக வைக்கப்பட்ட கட்-அவுட் அனைவராலும் அதிகமாக பரப்பப்பட்டு உலகெங்கும் டிரெண்டானது.

நதிக்கு நடுவில் எழுப்பப்பட்ட இந்த கட்- அவுட் நதியைவிட்டு பல மைல் தூரத்திலிருப்பவரும் பார்க்கும் வண்ணம் பிரமாண்டமாக நிறுவப்பட்டது. இம்முறை நடக்கும் உலக கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா நிச்சயம் வெற்றி பெற வேண்டுமென உற்சாகத்துடன் இந்த ஊர் மக்கள் இருந்து வருகின்றனர்.

மேலும், மறுபக்கம் எதிர்தரப்பாக பிரேசில் அணியின் ரசிகர்கள் 35 அடிக்கு பிரேசில் நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் நெய்மர் ஜூனியரின் கட் அவுட்டை அதற்கு அருகே எழுப்பியுள்ளனர். மேலும் இந்த கட்-அவுட்டை நிறுவும் முன் இதை வைத்து ரசிகர்கள் ஊர்வலமும் சென்றுள்ளனர்.

இருப்பினும், மெஸ்ஸி கட் அவுட்டை நிறுவிய அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதைக் கண்ட, பிரேசில் ரசிகர்கள் அதை விட தாங்கள் தங்களின் அணிக்காக ஏதேனும் செய்ய வேண்டுமென நினைத்ததையடுத்து இதை செய்துள்ளனர்.

கேரளா மெஸ்சி கட்-அவுட்டுக்கு போட்டியாக 35அடியில் நெய்மர் கட்-அவுட்!

நடைபெறவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைக்கு, கேரளப்பகுதிகளில் திருவிழாக்களைப் போல கொண்டாடும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதன் விளைவாக தற்போது ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க அணிகள் தங்களுக்கு கேரள ரசிகர்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சல்மான் கான் மனுவில் தீர்ப்பு வழங்க நேரமில்லை - மும்பை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.