டெல்லி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு நடத்தும் தானியக் கிடங்குகளில் சேமிக்கப்பட்ட 406 கோடி ரூபாய் மதிப்பிலான தானியங்கள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேற்கோள்காட்டியுள்ள ராகுல் காந்தி, "உணவை வீணாக்குவது என்பது ஏழைகளிடமிருந்து திருடுவதற்கு சமம். துறைசார்ந்த அலுவலர்கள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்களை சேதமடையாமலும் கெட்டுப்போகாமலும் பார்த்துக்கொள்ளும் வகையில், அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்குகளில் சேமிக்கப்படும் உணவுப் பொருள்கள், மழை, வெயில் உள்ளிட்ட காரணங்களால் அழுகியும், பூச்சிகள், எலிகள் போன்ற உயிரினங்களாலும் அதிக அளவில் வீணாகி வரும் நிலையில், இதற்கு தக்க நடவடிக்கைகள் தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இதையும் படிங்க: முடங்கின காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள்