டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய தெற்கின் குரலாக திகழ்வதாக, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, பாராட்டி உள்ளார். பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு நடைபெற்ற மூன்றாவது இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு (FIPIC) உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே பேசியதாவது, சர்வதேச அமைப்புகளில் மேலும் அனைத்து தீவு நாடுகளும் இந்தியாவின் பின்னால் அணி திரளும் என்று குறிப்பிட்டார். புவிசார் மற்றும் அரசியல் பதட்டங்களால் தீவு நாடுகள், அதிகளவில் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, இதுகுறித்து பேசியதாவது, மிக சமீபத்திய நிகழ்வான ரஷ்யா-உக்ரைன் போரின் போது, தீவு நாடுகள் 'உலகளாவிய சக்தி விளையாட்டு அல்லது மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக' குறிப்பிட்டு உள்ளார்.
இந்த போரின் காரணமாக, தங்களது நாட்டில் கடுமையான பணவீக்க அழுத்தம் ஏற்பட்டு உள்ளது என்றும், பசிபிக் தீவு நாடுகள் அதிக எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். "இந்த மாநாட்டில், உங்களுக்கு முன் அமர்ந்து இருக்கும் இந்த தீவு நாடுகள், எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களுக்கு, அதிக செலவு செய்து கொண்டு இருக்கின்றோம்.
பெரிய பெரிய நாடுகளின், புவிசார் அரசியல் விளையாட்டால், தாங்கள் பாதிக்கப்படுகிறோம், மற்றும் அங்குள்ள அதிகாரப் போராட்டங்களால் தாங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாக" மராப்பே தீவிர குரலாக வலியுறுத்தி உள்ளார். “G20 மற்றும் G7 போன்ற உலகளாவிய அமைப்புகளில், எங்களைப் போன்ற சிறிய தீவு நாடுகளிடம், பொருளாதாரம், பொருளாதார முன்னேற்றம், வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதால், எங்களின் பிரச்சினைகளை மிக உயர்ந்த இடங்களில் நீங்கள் தெரிவிக்கச் செய்கிறீர்கள்.” இந்திய பிரதமர் மோடி, எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
புவிசார் அரசியலின் நன்மைகள் குறித்து, மராப்பே பேசியதாவது, "எங்கள் நிலம் சிறியதாக இருந்தாலும். அதன் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், பசிபிக் பகுதியில் நமது பரப்பளவும் இடமும் பெரியதாக உள்ளது. உலக நாடுகள் தங்களது இந்த இடத்தை வர்த்தகம், யக்கம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக" தெரிவித்து உள்ளார்.
இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு இடையே உள்ள பகிரப்பட்ட வரலாறு குறித்த தகவல்களையும் மராப்பே எடுத்துரைத்தார். இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பல ஆண்டுகளாக இந்த தீவு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டு உள்ள அவர், காலனித்துவ வரலாறு உலகளாவிய தெற்கு நாடுகளை ஒன்றாக வைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
ஜி 20 உச்சி மாநாட்டை, இந்த ஆண்டு இந்தியா நடத்தும் வேளையில், உலகளாவிய தெற்கு நாடுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் இந்தியா வாதிடும் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததற்காக, பப்புவா நியூ கினியா பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். உலகின் பிற பகுதிகளிலிருந்து, தங்களது நாடுகள் பின்தங்கியிருப்பதாக தெரிவித்து உள்ள மாராப்பே, உலகம், அதன் வளங்களை உருவாக்கிக் கொள்ளும்போது, சொந்த நாட்டு மக்கள் அதன் பலனைப் பகிர்ந்து கொள்வதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். "உலகளாவிய தெற்கு நாடுகளில், நமது வளங்கள் மற்றவர்களின் அதிகாரத் தோரணைகள் மற்றும் அளவுகளின் அடிப்படையில் அறுவடை செய்யப்படும் போது, எங்கள் மக்கள் பின்தங்கி விடுவதாக" அவர் குறிப்பிட்டு உள்ளார்.
உலகையே புரட்டிப் போட்ட, கொரோனா பெருந்தொற்றின் போது, பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா மேற்கொண்ட உதவியை, பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மேலும், பெருந்தொற்று க்காலத்திம், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூற்றால், உலகளாவிய தெற்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். . பசிபிக் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, . உலகளாவிய தெற்கு நாடுகளின் விருப்பங்களை, இந்தியா தனது தலைமையில் விரைவில் நடத்தும் ஜி 20 மாநாட்டின் மூலம் உலகிற்கு முன்வைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.
இதையும் படிங்க: நாங்கள் நம்பியவர்கள் நெருக்கடியான சூழலில் உதவவில்லை - பிரதமர் மோடி வேதனை!