ETV Bharat / bharat

வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள சீர்திருத்தங்கள் அவசியம் - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

லக்னோ: வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள சீர்திருத்தங்கள் அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Dec 7, 2020, 5:00 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 07) காணொலி காட்சி மூலம் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளைத் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள சீர்திருத்தங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "முந்தைய காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தற்போது சுமையாக மாறியுள்ளது. முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் அரசுக்கு நம்பிக்கை உள்ளது. முன்பெல்லாம், சீர்திருத்தங்கள் சிறிது சிறிதாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும். முதலீட்டை அதிகரித்து நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 8,379.62 கோடி ரூபாயாகும். முதல்கட்டமாக இந்தத் திட்டத்தின் மூலம் 29.4 கி.மீ. நீளமுள்ள இரண்டு பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அப்பாதைகள் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்திரா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களை இணைக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.